தெரியாதவர்களுக்கு மட்டும்
சில சமயங்களில் கணிப்பொறியில் சேர்ந்துள்ள தேவையில்லாத Temporary File – களாலும், தேவையில்லாத Programme-கள் startup-ல் துவங்குவதாலும், மெதுவாகவும் தாமதமாகவும் Window ஆரம்பிக்கும்.
இது போன்ற சமயங்களில் தேவையற்ற
பைல்களை நீக்க, கீழ்க்கண்ட முறையை
பின்பற்றுங்கள்.
முதலில் Run
சென்று temp என்று டைப் செய்து OK
கொடுங்கள். பிறகு திறக்கும் விண்டோவில்
உள்ள அனைத்து File-களையும் அழிக்கவும்.
பிறகு முதலில் கூறியது போல
Run சென்று %temp% என்று டைப் செய்து
, திறக்கும் விண்டோவில் உள்ள அனைத்து File-களையும் அழித்து விடுங்கள்.
மூன்றாவதாக Run சென்று recent என்று டைப் செய்து
, திறக்கும் விண்டோவில் உள்ள அனைத்து File-களையும் அழித்து விடுங்கள்.
நான்காவதாக Run
சென்று msconfig
என்று
டைப் செய்து திறக்கும் System
configuration விண்டோவில்
உள்ள startup- ஐ திறக்கவும்.
கீழுள்ள
படத்தைப்
பார்க்கவும்.
பிறகு திறக்கும் விண்டோவில் Anti-virus தவிர தேவையில்லாத Programme-ன் முன்னால் உள்ள “டிக்”மார்க்கை (√) நீக்கி விடவும்.
பிறகு Apply கொடுத்து OK கொடுக்கவும்.
கணிப்பொறியை ஒருமுறை “ரீஸ்டார்ட்” (Restart) செய்யவும்.
அவ்வளவு தான். இனி
உங்கள் கணிப்பொறி
வேகமாக திறக்கும்.
நன்றி,
வாழ்க வளமுடன்,
S.ரவிசங்கர்


No comments:
Post a Comment